தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

தமிழ்வெளி

More than a Blog Aggregator
[MinTamil] Re: இந்தி படிக்கச் சொல்லும் தி.மு.க. அமைச்சர்

---------- Forwarded message ----------
From: Chandra sekaran
Date: 2008/11/18
Subject: [MinTamil] Re: இந்தி படிக்கச் சொல்லும் தி.மு.க. அமைச்சர்
To: minTamil@googlegroups.com

அன்புடையீர்,
கண்ணன் அவர்கள் கூறுவதை நானும் முன் மொழிகிறேன். அரசியல்வாதிகள் குறுகிய
கண்ணோட்டத்தோடு தமிழன், தமிழ் மட்டும் அறிந்து இங்கேயே ஓசிச் சோறும்,
இடமும், தொலைக் காட்சிப் பெட்டியும் தந்து, தங்களது பிடியிலேயே இருக்க
வேண்டும் என்பதை படித்த நண்பர்களும் தங்கள் கண்ணோட்டமாய் கொள்கையில்,
மனதுக்கு வேதனை தருகிறது. நன்றாக கவனியுங்கள், இந்த மின் தமிழிலேயே,
தமிழுக்கு அதிகம் சேவை அல்லது அர்பணிப்பிஉ,பங்களிப்பு, தமிழ்
நாட்டுக்குள்ளேயே உள்ள தமிழர்களிடமிருந்தா அல்லது, பல ஊர், பல மொழி, பல
தேசம் கண்ட தமிழ் ஆர்வலர்களிடமிருந்தா? சொல்லுங்கள்! இதற்காக, தமிழ்
நாட்டிலேயே உள்ள அறிஞர் பெருமக்களை நான் குறை கூறூவதாகக் கொள்ள வேண்டாம்.
வெளியேறிய மக்களின் உலக அறிவு விரிவடைய வாய்ப்புக்கள்
அதிகமாதலால்,அவர்கள் பங்களிப்பும் அதிகமாகிறது.தமிழ் மட்டும் கற்று பிற
மொழிகள் கற்பதையே எதிர்ப்பது என்பது, நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. தமிழை
நிறுத்தி, இந்தியையா கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இல்லையே?

ஒன்று தெரியுமா? அடக்குமுறை ஆட்சி கொண்ட சீன தேசத்தில், BPO சேவைக்கு
ஆங்கிலம் இன்றியமையாதது என்பதை புரிந்து கொண்டு ஆங்கிலம் கட்டாயப்
பாடமாக்கப்பட்டுள்ளது! அதே போல்தான் இந்தியும். தமிழ்நாட்டு மாநில
எல்லையைத் தாண்டிவிட்டால், இந்தி ஒன்று மட்டும் பேசி, எந்த மாநிலத்திலும்
காலட்சேபம் செய்யலாம்.

நான் கூறியதில் தவறிருப்பின் பெரியோர் பொறுத்தருள்க,
அடக்கத்துடன
சந்திரசேகரன்

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

and Tamil readers visit my blogs