தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

தமிழ்வெளி

More than a Blog Aggregator
[MinTamil] புகழ்பெற்ற வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் திடீர் மரணம்

---------- Forwarded message ----------
From: annamalai sugumaran
Date: 2008/11/19
Subject: [MinTamil] புகழ்பெற்ற வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் திடீர் மரணம்
To: minTamil@googlegroups.com

புகழ்பெற்ற வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் திடீர் மரணம் ---ஏ.சுகுமாரன்

பிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் திடீர் மரணம்
அடைந்தார். அவருக்கு வயது 89. பழம்பெரும் வில்லன் நடிகர் நம்பியார். இவர்
50 ஆண்டுகளாக சினிமாவில் கொடி கட்டி பறந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி,
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்
படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் குடியிருந்த கோயில், எங்க வீட்டு
பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, புதிய பூமி, நாளை நமதே,
நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிவாஜி நடித்த திரிசூலம் உள்பட
ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 1000க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக நம்பியார் உடல் நிலை
பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் உடல்நிலை மோசம் அடைந்தது.
வீட்டிலேயே படுத்த படுக்கையானார். இன்று பகல் 1.25 மணிக்கு அவர் மரணம்
அடைந் தார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் நம்பியார் உடல் பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்- நடிகைகள், அரசியல் கட்சி
பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நன்றி தினத்தந்தி
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com